search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar dam increased to"

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் இந்த அணையின் மூலம் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    அதே நேரம் பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2317 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1005 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை விட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்ட மும் உயர தொடங்கி உள்ளது.

    ×