search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bilateral relation"

    • மோடிக்கு லூவர் அருங்காட்சியகத்தில் பெரிய விருந்து அளிக்கப்பட்டது
    • ஜெய்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    கடந்த வருடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2-நாள் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டார். "இந்தியா, உலக சரித்திரத்தில் ஒரு பெரிய நாடு" என அப்போது பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum) பிரதமர் மோடிக்கு மிக பெரிய விருந்து அளிக்கப்பட்டது. இதையொட்டி, அந்த அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்படுவது அதன் சரித்திரத்தில், 60 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம்தான் முதல் முறையாக நடைபெற்றது.

    இந்நிலையில், வரும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

    இதில் பிரதம விருந்தினராக பங்கேற்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவிற்கு வர உள்ளார்.

    முன்னதாக ஜனவரி 25 அன்று பிரான்ஸ் அதிபருக்கு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில், மிக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட உள்ளது.

    தற்போது இந்தியா வரும் மேக்ரானின் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராணுவ மற்றும் தொழில்துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இரு துறைகளுக்கும் தேவைப்படும் உபகரண உற்பத்தியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது. குறிப்பாக, கனரக விமான எஞ்சின்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸின் உதவி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேக்ரானின் வருகை சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அரசாங்க ஆலோசகர் எம்மானுவல் பான் (Emmanuel Bonne) ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

    • தொழில்துறை முதலீடுகள் குறித்த கருத்தரங்குகளில் வில்லியம் கலந்து கொள்ள உள்ளார்
    • மோடியின் முயற்சிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என வில்லியம் கூறினார்

    தென் ஆப்பிரிக்காவின் இந்திய பெருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள நாடு, கென்யா. இதன் தலைநகரம் நைரோபி.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், கென்யா அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ (William Samoei Ruto) இந்தியாவிற்கு டிசம்பர் 4லிருந்து 6 வரை 3-நாள் அரசியல் சுற்று பயணமாக வருகை தர உள்ளார். அதிபருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் உடன் வருகை தர உள்ளது.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதிபர் வில்லியம் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 5 அன்று அதிபர் வில்லியமிற்கு ராஷ்டிரபதி பவனில் அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட உள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், வில்லியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்திய தொழில்துறையில் முதலீடு செய்வது குறித்து புது டெல்லியில் நடைபெற உள்ள கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வில்லியமின் வருகை, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    வில்லியம், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகை தரும் கென்ய அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது வருகை குறித்து கென்ய அதிபர் வில்லியம், "இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே சிறப்பான இருதரப்பு உறவு நிலவி வருகிறது. ஜி20 கூட்டமைப்பில் 55 உறுப்பினர் நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ×