என் மலர்
நீங்கள் தேடியது "Biodegradable - Non-biodegradable waste"
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
- இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி 26-வது வார்டு பகுதியில் நடந்த நகர சபா விழாவிற்கு வார்டு கவுன்சிலரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். இதனால் சுகாதார பணியாளர்களின் ஆரோக்கியம் மேம்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளதால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். 26-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக 2 வண்ணங்களில் குப்பை கூடை வழங்கிய நகர் மன்ற உறுப்பினர் ஜெயபாலனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதி நாயகம், வேலுச்சாமி, வைகை கணேசன், மாரியப்பன், செல்வகுமார், முருகன், முத்து சுப்பிரமணியன் மற்றும் பரப்புரையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






