search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.M.G. Takes control"

    • ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
    • முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்

    சித்தோடு:

    ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் எஸ். எல். பரமசிவம், எம்.பி.வெங்கடாஜலம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஆர். கோபால், எஸ்.பி. வல்லவராயன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக வடக்கு மாவட்ட தலைவர் செ ங்கோட்டையன் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தமிழ்நாட்டில் தொடர்ந்து திராவிட கட்சிகள் தி.மு.க. அ.தி.மு.க. என அரை நூற்றாண்டுகள் 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் நமக்கு முன்னேற்றம் கிடைத்ததா? இல்லை முன்னேற்றம் என்றால் அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

    நாளை நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாம் அதே குடிசை யில் வேலை வாய்ப்புகள் இன்றி உள்ளோம்.

    இந்த பவானி நகர் என்றவுடன் நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற பவானி ஜமுக்காளம் ஆகும். ஆனால் அந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. அந்த தொழில் செய்பவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் தற்போது ஒரு புது பிரச்சினை நூல் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.

    அதேபோல் அந்தியூர் பர்கூர் மலை வாழ் மக்கள் சுமார் 35 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக எஸ்.டி. சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் அந்த சான்றிதழ் வழங்க ப்படவில்லை. இதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஏன் தர மறுக்கின்றனர் என தெரிய வில்லை. கிருஷ்ணகிரியில் கொடுத்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் இதுவரை கிடைக்க வில்லை. உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் மலை வாழ் மக்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

    பாட்டாளி மாடல் என்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாதது தான் ஆகும். பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக செல்லலாம். தரமான இலவசமான கல்வி வழங்கப்படும். இலவசமாக சுகாதாரம் கிடைக்கும், நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். புதிய ஏரிகள் உருவாக்க ப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்க அனைத்து விதமான நடவடி க்கையும் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கலாம். வருகின்ற 2026-ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் நன்றி கூறினார்.

    முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் யோகபிரபு, துணைத் தலைவர் சர்வேயர் வேலு, துணை செயலாளர் முருகானந்தம், ஜம்பை பேரூர் செயலாளர் சம்பத், பேரூர் தலைவர் கார்த்தி, உழவர் பேரியக்க நிர்வாகி சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் குமார், முன்னாள் கவுன்சிலர் தாண்டவன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், ஜம்பை பேரூர் பொறுப்பாளர் சக்திவேல், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய கவுன்சி லர் வனிதா ஜெகதீசன், டாஸ்மாக் பாட்டாளி தொழிற் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில துணை செய லாளர் சேகர், மாணவர் சங்க பொறுப்பா ளர் பிரேம் ஆனந்த், மாநில இளைஞர் சங்க முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட இளைஞர் சங்க தலைவருமான முனுசாமி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் முத்து லட்சுமி முனுசாமி, மத்திய மாவட்ட முன்னாள் செய லாளர் துர்க்கா கோவிந்த ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், அந்தியூர் தெற்கு செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவிந்தசாமி, மத்திய மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனிவேல், காஞ்சிகோவில் பேரூர் செயலாளர் அய்யனார், பள்ளா பாளையம் பேரூர் செயலாளர் முத்துசாமி, அம்மாபேட்டை முன்னாள் சேர்மன் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் ஆண்டவர், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் செந்தில்குமா ர், மாவட்ட துணை செயலாளர் நடராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ராஜூ, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன் என்ற தண்டாயுத பாணி, பாட்டாளி சமூக ஊடக பேரவை குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×