என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bonnatti"
- திட்ட அலுவலரும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார்.
- நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கோட்டை- வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
விழாவிற்கு திட்ட அலுவலரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ராமச்சந்திரன் வரவேற்றார். மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் உலகநாதன், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மகாலிங்கம், செயலாளர் ராஜகோபால், துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன், ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் மணிகண்டன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மணி, ஓய்வு பெற்ற பதிவறை எழுத்தர் நாகராஜன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என அனைவரும் பொன்னாடை போர்த்தி கவரவிக்கப்பட்டனர். இநத முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. முடிவில் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார்.