என் மலர்
நீங்கள் தேடியது "Book Realse Ceremony"
- நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
- நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார்.
தூத்துக்குடி:
நாம் இந்தியர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு விழா மற்றும் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள என்.பி.எஸ். திறந்தவெளி மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது.
நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசுகிறார். கட்சியின் தலைவர் என்.பி.ராஜா சிறப்புரை யாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து என்.பி. ராஜா எழுதிய புத்தகம் வெளி யிடப்படுகிறது. அதனை மாண வர்கள் பெற்றுக் கொள்கிறா ர்கள்.
தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச உள்ளனர். முடிவில் கட்சி மாநில பொருளாளர் ஜெய கணேஷ் நன்றி கூறுகிறார். விழாவில் நாம் இந்தியர் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார, கிளை க்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.






