என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BOXING COMPETITION"
- தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் பாவூர்சத்திரத்தில் உள்ள டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆசில் முகமது, முகமது இர்ஃபான் பதான்,ஜெபின், ராஜவேல், முருக அஷ்வந்த், அர்ஷத்,மகிமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். செல்டன் சார்லஸ், சுப்புலட்சுமி ஆகியோர் 2-ம் இடத்தை பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தீனதயாளன், கவின் ராமலிங்கம், கார்த்திகா, இஸ்ரா, ஜெனிஸ்ஷா ஆகியோர் முதலிடமும், முகமது யூசுப் 2-ம் இடமும், குகேஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீ மோகனசுந்தர், மெல்வின் செல்வ ஆண்டோ, முகமது யாசிர், நவீன், பிரவீன் குமார் ஆகியோர் முதலிடமும், கவுதம் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் செயலாளர் கஸ்தூரிபெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.
- திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் கரூர் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்
- நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்
கரூர்:
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவன் பீமா சங்கர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பர்ஸ்ட் ஆசியா மீட்-2022 எங்க் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் லைட் ப்ளே பிரிவில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
இதன் மூலம் அவர் உலக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டுக் கூட்டமும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கி இந்திய அளவில் வெற்றி பெற்றதற்கு தேசியக் கொடியுடன் கூடிய பரிசை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியர் அழகம்மாள், ஆங்கில ஆசிரியர்கள் கார்த்திக் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்