search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brain-Eating Amoeba"

    • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
    • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

    தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

    தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

    அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

    அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

    கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • `நேக்லரியா போலேரி' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும்.
    • ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். இந்த தொற்று பாதிப்புக்கு காரணம் ''நேக்லரியா போலேரி'' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். மூளையை தின்னும் அமீபா என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

    'நேக்லரியா போலேரியா' என்னும் இந்த ஒற்றை உயிரணு உயிரினம் உலகம் முழுவதும் உள்ள ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சூடான நீரிலும், சரியாக குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

    வெதுவெதுப்பான நீர் உள்ள குளங்கள் அல்லது ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து நேரடியாக மூளைக்கு செல்கிறது. பின்னர் மூளையின் திசுக்களை வேகமாக தின்று அழிக்கிறது.

    இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி காணப்படும். மேலும், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் இல்லாமை, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கண் முன் மாய தோற்றங்கள் தோன்றுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்பட்ட 12 நாட்களில் மரணம் நேர்கிறது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மூளை தின்னும் ''நேக்லரியா போலேரி'' அமீபா இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த அமீபா பாதிப்பை சரியான முறையில் கண்டறிய தவறுவதால், மூளைக்காய்ச்சல் என்று கருதி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மூளையை உண்ணும் அமீபா வெதுவெதுப்பான நீரில் வாழும் ஒரு தெர்மோபிலிக் உயிரினம். இதனால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் வெதுவெதுப்பான நீர் நிலைகளில் இவை பெருக ஏற்றதாக இருக்கிறது. எனவே, இந்த அமீபா தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தொற்று உயிரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    ×