என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bribery complaint"
- போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
- சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது.
- கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் திருப்பூர் சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பல்லடம் அருகே உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி சப் - கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மற்றும் நில அளவையர் ஒருவர் மீது லஞ்ச புகார் அளித்தார்.இது குறித்து சப் - கலெக்டரிடம் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:-எனக்கு சொந்தமான விவசாய நிலம் 4 ஏக்கர் கேத்தனூரில் உள்ளது. அந்த நிலத்தை சர்வே செய்து அளந்து கொடுக்குமாறு கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து மனு கொடுத்துளேன். லஞ்சம் கேட்டு பல்வேறு காரணங்களை கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இறுதியாக லஞ்சம் கொடுத்து, கடந்த மாதத்தில் நில அளவீடு பணி நடைபெற்றதாகவும்,தற்போது மீண்டும் கூடுதலாக லஞ்சம் கேட்பதாகவும் அவர் கூறினார்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்- கலெக்டர் இது குறித்து விசாரணை செய்வதாகக் கூறினார். இதனால் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகர பகுதிகளில் மிக முக்கிய போலீஸ் நிலையங்களாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் குடும்ப பிரச்சினை, அடிதடி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த அக்பர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றுள்ளார்.
வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்யாமலேயே இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மீது பாதிக்கப்பட்ட அக்பர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஊரக போலீஸ் நிலையத்திற்கு பணிமாறுதலில் சென்றார்.
இதுபோல தொடர்ச்சியாக அவர் மீது புகார் எழுந்துள்ளன. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவியை தர்மபுரி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இது போன்று ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்