search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brisbane Heat"

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.

    சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஜோர்டான் சிக் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 ரன்களில் அவுட்டானார். வின்ஸ் 75 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    பிரிஸ்பேன் ஹீட் சார்பில் ஜோஷ் லலோர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது.

    ஆனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 75 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாக தேவு செய்யப்பட்டார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ். #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பிரிஸ்பேன் ஹீட் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரையன்ட் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 55 பந்தில் 84 ரன்கள் விளாச பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ஹென்ரிக்ஸ் 57 ரன்னும், அவெண்டானோ 30 ரன்னும், சில்க் 46 ரன்களும் விளாச சிட்னி சிக்சர்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 165 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்.
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #BigBashLeague
    ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 2018-19 சீசன் இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.

    முதன்முறையாக காய்ன் சுண்டப்படுவதற்குப் பதிலாக பேட் தூக்கிப்போடப்பட்டது. இதில் அடிலெய்டு அணி டாஸ் வென்று பந்து வீச்சு தொடங்கியது.

    அதன்படி பிரிஸ்பேன் ஹீட் அணியின் பிரெண்டன் மெக்கல்லம், பிரையன்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 4 ரன்னில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தார். பிரையன்ட் 22 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கிறிஸ் லின் 20 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் பெய்ர்சன் 13 பந்தில் 24 ரன்கள் சேர்க்க பிரிஸ்பேன் ஹீட் 19.4 ஓவரில் 146 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு அணியின் கேப்டன் அலெக்ஸ் கேரி, வெதரால்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெதரால்டு 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி 46 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார். வெல்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 24 ரன்கள் சேர்க்க அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இரண்டு கோடிக்கு மேல் ஏலம் போன அடிலெய்டு கேப்டன் இன்ங்கிராம் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை பிக் பாஷ் அணியான பிரிஸ்பேன் ஹீட் ஒப்பந்தம் செய்துள்ளது. #BigBash
    ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். 17 வயதே ஆன இவரை ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால், சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.



    இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் தொடரில் விளையாடும் பிரிஸ்பேன் ஹீட் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் 11 போட்டியில் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் முஜீப் உர் ரஹ்மான்.
    ×