search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "briyani shop"

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த பள்ளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பச்சை, சிமெண்ட், வெள்ளை நிறம் கலந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். அவருடைய வலது மார்பின் கீழ் பகுதியில் கருப்பு மச்சமும், வலது கால் பாதத்தின் மேல்பகுதியில் காயத்தழும்பும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடை கண்ணாடியை நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் உடைத்து சென்றது தெரியவந்தது.
    • கண்ணாடியை உடைத்தது கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்த முகமத் அஸ்ரப்(38) என்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவை செல்வபுரத்தில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து கொண்டு, கடை மேலாளர் ஷேக் அப்துல்லா(36) கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனையடுத்து அங்கிருந்த சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது கடை கண்ணாடியை நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் உடைத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஷேக் அப்துல்லா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், கண்ணாடியை உடைத்தது கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்த முகமத் அஸ்ரப்(38) என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். முகமத் அஸ்ரப் மீது ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×