search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building consultation"

    • பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டுவதற்கான கருத்து கேட்டு கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையிலும், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன்,

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி துரைராஜா, பா.ஜ.க. நகர தலைவர் நந்தகுமார், பா.ம.க. நகர செயலாளர் தினேஷ் குமார் நாயகர்,

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகேசன், பவானி நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் காவேரி ஆற்றங்கரை மற்றும் பொது மயானம் அருகில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொண்ட இந்த தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வகையில் 3 வழித்தடம் இருந்தும் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர போதிய வசதி இல்லை.

    இதனால் ஓசூரில் இருந்து காய்கறிகள் கொண்டு வர பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் மார்க்கெட் பக்கம் வருவதே இல்லை. வெறிச்சோடியே காணப்படுகிறது. இதனால் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    ஆகவே பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மற்றும் வியாபாரிகள் உள்பட பவானி நகர பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தின் போது ஒரு சிலர் காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலேயே புதிதாக புனரமைப்பு செய்து நடத்திட வேண்டும் எனவும், புதிய பஸ் நிலையம் அருகில் கொண்டு செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினர்.

    அப்போது சிறிது நேரம் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பலரின் கருத்தும் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்லவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    இது குறித்து நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் கூறுகையில்,

    சட்டசபை மானிய கோரிக்கையின் போது நகராட்சி பகுதிகளில் காய்கறி மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    பவானி நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் கட்ட ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. பவானி நகராட்சி பகுதியில் உள்ள பழைய காய்கறி மார்க்கெ ட்டை புதிப்பிப்பதா? அல்லது புதிதாக கட்டப்பட வேண்டுமா? என தாங்கள் கருத்துக்களை கூற இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று உள்ளது.

    இங்கு விவாதிக்கப்பட்ட விவாத ங்கள் குறித்து உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வந்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

    மேலும் போக்குவரத்து வசதியால் மார்க்கெட் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதே போல் பழைய இடத்தில் உழவர் சந்தை ஒன்று கொண்டு வந்தால் விவசாயிகள் பயனடை வார்கள் என்றும் விவாதிக்கப்பட்டது.

    அப்போது ஒரு சிலர் இருக்கும் இடத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், மாற்ற கூடாது எனவும் பேசியதால் கூட்ட த்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    முடிவில் ஆணையாளர் பொறுப்பு கதிர்வேல் கூறுகையில், கூட்டம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பவானி நகரத்தின் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு 3 மணி நேரத்திற்கு மேலாக பேசியும் எந்த விதமான இறுதி முடிவும் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடதக்கது ஆகும்.

    ×