search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus station has started"

    • கரும்புக்கடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது.
    • கடைகள் இடித்து அகற்றப்பட்டன

    கோவை

    கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த மேம்பாலம் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட்டமாகவும், கரும்புக்கடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது. இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் வரை முடிந்து விட்டது.

    இந்த மேம்பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனை புதைவட மின்சார கேபிள் மூலம் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.9 கோடியில் பணிகள் நடைபெற்றது.

    இதுதவிர லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வட்ட வடிவில் அமையும் இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனையடுத்து உக்கடம் பகுதியில் மேம்பால போக்குவரத்து வசதிக்காக உக்கடம் பஸ் நிலையம் மாற்றி அமைக்கபட உள்ளது. இன்று காலையில் உக்கடம் பஸ் நிலைய கட்டிடத்தின் வெளிபுறம் செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த கட்டிடத்தின் பஸ் நிலையம் உள்புறம் உள்ள கேரள மாநிலம் செல்லும் பஸ் நிறுத்த பிளாக்குகளும் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் அடுத்த பிளாக்கில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.தொடர்ந்து உக்கடம் பஸ் நிலைய கட்டி டம் ஒவ்வொரு பகுதியாக இடிக்கப்பட உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×