search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caused a commotion"

    • வாட்டர் பாட்டிலை எடுத்து திடீரென உடலில் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை அவரிடம் வழங்கினர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊஞ்சகாடு பகுதியை சேர்ந்த ராசு (40) என்பவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் முன்பு வந்து தான் மறைத்து வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து திடீரென உடலில் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி வந்து அவரிடமிருந்து வாட்டர் பாட்டிலை பறித்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவரது சட்டை நீலம் நிறத்தில் மாறியது. இது குறித்து போலீசார் அவரிடம் கேட்டபோது நான் ஊற்றியதும் மண்எண்ணெய் இல்லை, தண்ணீரில் நீல கலரை கலந்து உடலில் ஊற்றினேன் என்றார்.

    இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் அந்தியூர் ஊஞ்சக்காடு பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தேன் என்றும், கடந்த 4 வருடங்கள் முன்பு எண்ணை பணியில் இருந்து நீக்கி விட்டார்கள் என்றும், மீண்டும் வேலைக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.

    இது சம்பந்தமாக ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் இவ்வாறு செய்தேன் என்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    ×