என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cell phone Towers"
- விருதுநகர் அருகே செல்போன் டவர்கள் மாயமானது.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அதற்கான உபகர ணங்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்கள் காணாமல் போயின. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆகும்.
அதேபோல் கல்குறிச்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்க ளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். செல்போன் டவர்கள் காணாமல் போனது குறித்து தனியார் நிறுவன மேலாளர் முத்துவெங்கடகிருஷ்ணன் விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியில் சென்னையை சேர்ந்த மற்றொரு நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ்குமார், அருப்புக் கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
- அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராம த்தில் தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் டவர் பொது மக்களின் குடியிரு ப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அவலூ ர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக கூறியதின்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போ க்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- கணவர் இறந்து விட்டதால் உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து வந்தார்.
- தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமதி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் விடுத்த பெண் ஒருவரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம், குறிஞ்சி பட்டியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி சுமதி என்பதும், கணவர் இறந்து விட்டதால் உறவினர்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு, கிடைத்த வேலையை செய்து வந்தார்.
இந்தநிலையில் குடிபோதைக்கு அடிமையான அவர் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது, உறவினர்களுடன் தகராறு செய்துவிட்டு குடிபோதையில், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது .இதையடுத்து, செல்போன் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக சுமதி மீது பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்