search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chairman Vasmati Amba Sankar"

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் வசுமதிஅம்பாசங்கர் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,துணை சேர்மன் ஆஸ்கர்,முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் வடக்கு காலாங்கரை ஊராட்சி ஒன்றிய பள்ளி சாலை அமைத்தல்,டிவி ரூம் தெரு உட்பட இரு இடங்களில் சிமெண்ட் ரோடு அமைத்தல்,

    குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளி அம்மன் கோவில் கீழ் பகுதி தெரு வரை பேவர் பிளாக் சாலை அமைத்தல், மேலத்தெரு பொன்ராஜ் நகர் முதல் வாட்டர் டேங் வரை தார்சாலை அமைத்தல், ராமசந்திரபுரம் வடக்கு தெருவில் தார்சாலை அமைத்தல்,கூட்டாம்பளி சர்ச் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வண்ணாரப்பேட்டை ஸ்ரீமுனியசாமி கோவில் தெரு உட்பட இரு இடங்களில் சாலை அமைத்தல்,கிழக்கு காமராஜ்நகர் தெருக்களில் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல்,கோரம்பள்ளம் பக்கிள் ஓடையில் அருகே சிறு பாலம் அமைத்தல், முடிவைத்தானேந்தல் ஊராட்சி யில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி மேலக்கூட்டுடன்காடு மெயின் தெருவில் தார்சாலை அமைத்தல்,

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி

    காமராஜ்நகர் ரேசன் கடைதெருவில் தார்சாலை அமைத்தல், ஏ.பி.சி.காலேஜ் ரோடு தார்சாலை அமைத்தல், சமீர்வியாஸ்நகர்,சேசுநகர் சந்திப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டுதல்,

    கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி கிழக்கு பகுதிகளில் 1,2,3 தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தாளமுத்து நகர் கடற்கரையில் தொழில்புரியும் மீனவர்களின் டூ வீலர் நிறுத்தம் ஷெட் அமைத்தல், டி.சவேரியார்புரம் புதிய ரேசன் கடைக்கு அருகில் அடிபம்ப் அமைத்தல்,தாய்நகர் ஊர் பொது இடத்தில் அடிபம்ப் அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் தெற்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி சிறுப்பாடு சவேரியார்புரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு ஸ்ரீநாராயண சுவாமி கோவில் தார்சாலை அமைத்தல், அல்லிகுளம் ஊராட்சியில் அல்லிகுளம் கிராமத்தில் வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சி லர் அந்தோணி தனுஸ்பாலன் பேசுகையில், மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் அரசு சார்பில் 1 முதல் 5 வரை மாணவ-மாணவியர் படிக்கும் பள்ளி மட்டுமே உள்ளது.அது உயர்நிலைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும்,

    தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனம் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்ததை வாகன நிறுத்த காப்பகம் அமைக்கப்படும் என்று ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த ஒன்றியக்குழு தலைவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்து மாலை,தொம்மை சேவியர், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்து லட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, உதவி பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வை யாளர்கள் முத்துராமன், சுப்பிர மணியன், யூனியன் மேலாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.முன்னதாக, சாலை விபத்தில் இறந்த முள்ளக்காடு ஊராட்சி செயலர் வர்த்தகரெட்டிப்பட்டி சுப்பையாவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ×