என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Champion title"
- பெண்கள் ஆக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
- அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் ஆக்கி போட்டி அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற 4 கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதலாவது அரையிறுதியில் அமெரிக்கன் கல்லூரி அணி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி அணியை 8-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 2-வது அரையிறுதியில் லேடி டோக் கல்லூரி அணி, பாத்திமா கல்லூரி அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரியை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.
வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
- வாடிப்பட்டியில் நடந்த மாநில ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றனர்.
- எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எவர் கிரேட் ஆக்கி கிளப் சார்பில் எல்.ராஜூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.
நிறைவு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன், மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். கிளப் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.
இதில் திருநகர் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 2-ம் பரிசை திருச்சி விளையாட்டு விடுதி அணியும், 3-ம் பரிசை நெல்லை விளையாட்டு விடுதி அணியும், 4-ம் பரிசை மதுரை விளையாட்டு விடுதி அணியும் பெற்றன. போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, வருவாய் ஆய்வாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் வெள்ளைசாமி, சரவணன், சந்திரமோகன், ராமசாமி, காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.=
- கபடி போட்டியில் அணைக்கரைபட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் மதுரை மாவட்ட அளவிலான மயில்நினைவு கபடி போட்டி நடந்தது. இதில் 81 அணிகள் கலந்து கொண்டன.
முதலிடத்தை அணைக்கரைபட்டி ஏ.கே.நண்பர்கள் கிளப் அணி தட்டிசென்றது. அந்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், சுழல்கோப்பையையும் உரப்பனூர் ஊராட்சி மன்றத்தலைவர் யசோதை சாமிநாதன் வழங்கினார். 2-ம் இடத்தை கொக்குளம் தமிழரசன் அணி பிடித்தது.
அந்த அணிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை தனக்கன்குளம் அணியும், நான்காம் இடத்தை மேலஉரப்பனூர் அணியும் பிடித்தது.
போட்டியின் நடுவர்களாக அகிலஇந்திய கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் குனராஜ், ராமமூர்த்தி, சக்தி, தமிழ்நாடு கபடி நிர்வாககுழு உறுப்பினர்கள் சதீஷ், அஜித், மருது ஆகியோர் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்