search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandra Grahan"

    • அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • நாளை அனைத்து கோவில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சென்னை:

    சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று இரவு முன் கூட்டியே நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு நாளை காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சந்திர கிரகணத்தையொட்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு நாளை அதிகாலையில் கோவில் சுத்தம் செய்யப்படுகிறது. நாளை காலை 6 மணிக்கு பரிகார பூஜை நடக்கிறது. காலை 7 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அப்போது அன்னத்தால் சாமியை அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நாளை அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த பிறகு காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருமுல்லைவாயல் கொடியிடையம்மன் ஆலயத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை காலையில் பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலின் நடை இன்று இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். மேலும் நாளை காலை 6 மணிக்கு உற்சவர் வீரராகவர் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. பின்னர் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று இரவு 8 மணி முதல் நடை சாத்தப்பட்டு நாளை காலை 6 மணிக்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. பொன்னேரி சிவன் கோவிலில் இன்று இரவு 7.30 மணி முதல் நடை சாத்தப்பட்டு நாளை காலையில் சுத்தம் செய்து மீண்டும் வழக்கம் போல் திறக்கப்படுகிறது.

    மீஞ்சூர் அடுத்த காளியம்பாக்கம் அரங்கநாதர் பெருமாள் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் நாளை காலை 7 மணிக்கு திறக்கப்படுகிறது. பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி முருகன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு நாளை காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு நவாபரண பூஜை நடைபெறுகிறது. பின்னர் 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வழக்கத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சந்திர கிரகணத்தை முன்னிட்டு சற்று முன்னதாகவே அன்னாபிஷேகம் நடைபெற்று இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை அனைத்து கோவில்களிலும் அதிகாலை நேரத்தில் புனித நீர் தெளித்து சுத்தம் செய்து பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (28-ந்தேதி) நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்படும். பின்னர் மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலச பூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நாளை மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 28-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்படும். மறுநாள் 29-ந்தேதி ஞாயிறுக்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்திர கிரகண தோஷ நிவர்த்திக்கு பின் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது.
    • நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும்.

    சென்னை:

    வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சவுந்தர ராஜ பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது. நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும். அப்போது நிலவின் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.

    சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும்.

    பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம். சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நீடிக்கிறது.

    இதில் முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணிவரை நிகழும்.

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மாலை 5.38 மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது. எனவே முழு கிரகணத்தை காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணிவரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

    மேலும் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தான் தமிழகத்தில் காண முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த முறை நீண்ட நேர சந்திர கிரகண நிகழ்வு 2,669-ம் ஆண்டுதான் ஏற்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. 

    ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணிவரை, அதாவது 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

    இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தோன்றும்.

    இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியும்.

    இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். தமிழகம் உள்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

    சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி தோன்றும்.
    சென்னை:

    சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன.

    சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

    அந்த வகையில் இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் நாளை (19-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 11.32 மணிமுதல் மாலை 5.34 மணிவரை அதாவது 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

    இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி தோன்றும்.

    இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியும்.

    இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். தமிழகம் உள்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.


    சந்திர கிரகணத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்ததால் கர்நாடக மந்திரிகள் சிலர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #chandragrahan
    பெங்களூர்:

    சந்திரகிரகணம் நேற்று நள்ளிரவு ஏற்பட்டது. இது இந்த ஆண்டின் மிக நீண்ட நேர கிரகணமாக 4 மணிநேரம் நீடித்தது.

    இந்த கிரகணம் ஜோதிட ரீதியாக 8 நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பரிகாரமும் கூறப்பட்டது.

    கர்நாடகத்தில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மந்திரிகள் சிலர் கிரகணம் தொடர்பாக தங்களது ஆஸ்தான ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்டுக்கொண்டனர்.

    அதன்படி கிரகணத்தின் போது சில மந்திரிகள் பெங்களூரில் தங்காமல் சொந்த ஊருக்கே சென்று விட்டனர். கிரகணம் நள்ளிரவு தான் ஏற்படுகிறது. ஆனால் மந்திரிகளை முதல் நாளே பெங்களூரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். இதனால் பெங்களுரில் நேற்று மந்திரிகள் அறைகளில் கூட்டம் இல்லை. தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    உயர் கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவகவுடா உள்பட 26 மந்திரிகள் மட்டுமே நேற்று பெங்களூரில் தலைமைச் செயலகத்தில் இருந்து அலுவல்களை கவனித்தனர். 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் சந்திரகிரகணம் என்பதால் ஊரிலே இல்லை. இதனால் மந்திரிகளை சந்திக்க வரும் மக்களின் கூட்டம் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் மூத்த காங்கிரஸ் மந்திரி ஒருவர் இந்த தகவலை மறுத்தார். மந்திரி பரமேஸ்வராவின் சகோதரர் சிவபிரசாத் இறந்துவிட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக அனைவரும் தும்கூர் சென்று விட்டனர் என்றார்.

    கர்நாடகத்தின் சிக்கமகளூர் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஹாவுகொல்லா என்ற பழங்குடியின மக்கள் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் கிரகணத்தின் போது வீட்டில் இருக்கக் கூடாது என்று கருதி வீடுகளை விட்டு வெளியேறினார்கள். #chandragrahan
    சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை புதுவையில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் மறுநாள் சனிக்கிழமை பரிகார பூஜைக்கு பிறகு நடைகள் திறக்கப்படும்.
    புதுச்சேரி:

    சந்திரகிரகணம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு முடிகிறது.

    இந்திய பகுதியில் நள்ளிரவு 12.59 மணிக்கு சந்திரன் முழுமையாக மறைந்து இருள் நிலை ஏற்படும். பின்னர், அதிகாலை 2.43 மணியளவில் இருள் நீங்கி சந்திரன் வெளிப்பட தொடங்கும்.

    பொதுவாக கிரகண நேரங்களில் தோ‌ஷம் ஏற்படுவதால் கோவில்களில் நடை சாத்தப்படும். சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை புதுவை கோவில்களின் நடை சாத்தப்படுகிறது.

    புதுவை அருகே உள்ள பஞ்சவடி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை மதியம் 1 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் மறுநாள் சனிக்கிழமை பரிகார பூஜைக்கு பின்னர் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும்.

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மறுநாள் காலை 6 மணிக்கு பரிகார பூஜையை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்படுகிறது.

    இதே போல் புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், பாகூர் மூல நாதசாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நாளை மாலைக்கு பிறகு நடை சாத்தப்பட்டு மீண்டும் மறுநாள் காலை திறக்கப்படுகிறது.
    சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணி நேரம் மூடப்படஉள்ளது. #Tirupati #TirupatiTemple #ChandraGrahan
    திருமலை:

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை 12 மணி நேரம் மூடப்படஉள்ளது.

    நாளை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

    இதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


    மேலும் நாளை மறுநாள் காலை நடைபெறும் சுப்ரவாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும்.

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு, திருமலையில் செயல்பட்டு வரும் அன்னதான கூடங்கள் நாளை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை மூடப்பட உள்ளது.

    அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்களுக்கு புளியோதரை, தக்காளி சாத பொட்டலங்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் 12 மணி நேரம் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Tirupati #TirupatiTemple #ChandraGrahan
    ×