search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Charitable Council"

    • வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    வாசுதேவநல்லூர்:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    இந்து நாடார் உறவின்முறை செயலாளர் சண்முகானந்தன் தலைமை தாங்கினார். இந்து நாடார் உறவின்முறை பள்ளி கமிட்டி உப தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாநகர தலைவர் பாக்யராஜ், செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் ராயகிரி அய்யாசாமி, நெல்லை மாநகர துணை தலைவர் ஜோசப்ராஜ், துணை செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் சரத் கண்ணன், சண்முகராஜ், ராஜேஷ், தமிழ் ஆசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காமராஜர் ஆங்கிலப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    இதேபோல் டி.ராமநாதபுரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் செல்லக்கனி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பசுபதி தனராஜ் நன்றி கூறினார்.

    ×