என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chennai central railway station"
- பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
- தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 2 பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் தரவில்லை.
- ரூ.37 லட்சத்திற்கு முறையான கணக்கை காட்டினால் மட்டுமே அந்த பணம் திரும்பி கொடுக்கப்படும்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் 2 பயணிகள் ரூ.37 லட்சம் பணத்துடன் சிக்கினர்.
பெங்களூரு, ஆந்திராவை சேர்ந்த இருவர் கணக்கில் வராத பணத்தை கையில் கொண்டு வந்ததால் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து வந்த ரெயிலில் பயணி ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தன.
அவரிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணமூர்த்தி (53) பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. சென்னை சவுகார்பேட்டையில் தங்க வியாபாரி ஒருவரிடம் ரூ.25 லட்சம் ஒப்படைக்க கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதே போல் இன்று காலையில் ஐதராபாத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த வாசு(42) என்பவர் பையில் ரூ.11 லட்சத்து 98 ஆயிரம் பணம் இருந்தது. மிண்ட் தெருவில் தங்கம் வாங்குவதற்காக இந்த ரொக்கத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
2 பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் தரவில்லை. வரி ஏய்ப்பு செய்யும் வகையில் ரொக்கமாக பெரும் தொகையை கொண்டு வந்து சென்னையில் தங்கம் வாங்கி செல்ல வந்து இருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவகணேசன் இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அவர்களிடம் பிடிபட்ட பணத்திற்கான ஆதாரங்களை கேட்டு விசாரித்து வருகின்றனர்.
ரூ.37 லட்சத்திற்கு முறையான கணக்கை காட்டினால் மட்டுமே அந்த பணம் திரும்பி கொடுக்கப்படும்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் ரெயில் பயணிகளின் டிக்கெட்டுகளில் முன்னர் சென்னை சென்ட்ரல் என இருந்த பெயர் மாற்றப்பட்டு, ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் உள்ள பெட்டிகளில் செருகி வைக்கப்படும் தகடுகளிலும் பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இடவசதி கருதி ரெயில்களில் உள்ள பெட்டிகளில் ’எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல்’ என மட்டும் குறிப்பிடுமாறு ரெயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரெயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) தற்போது சென்னை சென்ட்ரல் தட்டிப்பறித்து விட்டது, குறிப்பிடத்தக்கது. #chennaicentral #Nationwideimportance #mgramachandran #mgramachandranrailwaystation
கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும்’ என்று அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று பெயர் மாற்றி நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. #CentralRailwayStation
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன் என தெரியவந்தது.
போலீசார் இருவரையும் அழைத்து செல்ல முயன்ற போது திடீரென அதில் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.
போலீசாரிடம் தப்பி சென்ற இருவரும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தனக்கு தானே பிளேடால் வெட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
எதற்காக அவர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடினார்கள். ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட வந்தார்களா? என்பது பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்