search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennimalai area"

    • போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
    • வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் சுற்று வட்டார கிராம பகுதகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்த அச்சத்தை போக்கும் வகையில் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு, ஈங்கூர், சிறு க்களஞ்சி உள்பட பல்வேறு இடங்களில் இரவு முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.

    தொடர்நது கிராமப்பு ற ங்களில் தனி யாக உள்ள வீடுகள், வய தான தம்பதி கள் வசிக்கும் வீடுகள் மற்று ம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் போலீசார் சென்று பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இதற்காக ''ஸ்மார்ட் காவலர்'' என்ற செல்போன் செயலி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்தந்த பகுதியில் இருந்து போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்ற வேண்டும்.

    இதன் மூலம் எந்த போலீசார் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு ரோந்து பணியின் போது போட்டோ எடுத்து உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

    வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிய நள்ளிரவு நேரத்திலும் அவர்களை எழுப்பி புகைப்படம் எடுத்து செயலி மூலம் பதிவேற்றி வருகின்றனர்.

    கிராமப்புறங்க ளில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக பெருந்துறை செயற்பொறியாளர் பி.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற நாளை (வியாழக்கிழமை) செயல்படுத்தப்பட உள்ளதால் சென்னிமலை டவுன் பகுதி முழுவதும்,

    பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மா பாளையம்.

    அசோகபுரம், புதுப்பாளையம், ராமலி ங்கபுரம், ஒரத்துப்பாளை யம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தெ ாழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.
    • மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. பொது மக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை கொட்ட தொடங்கியது. நேற்று மாலை 3.30 மணி அளவில் வானம் கரு மேகத்துடன் திரண்டு இடியுடன் மழை கொட்டியது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் ரோடுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. வேக மாக கொட்டிய மழையால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் இந்த மழை மிகுந்த பயன் உள்ளது எனவும், நெல் நடவு பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    சென்னிமலை பகுதியில் குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குகள் தற்போது நகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் புகுந்து தொந்தரவு செய்வது அதிகரித்து விட்டது.

    குரங்குகளுக்குள் ஏற்படும் சண்டை மக்களை பய முறுத்துகிறது. சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குள் அங்கு உணவு பற்றாக்குறையால் சென்னிமலை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டன. வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களை குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையில் இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நடவடிக்கையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் இதுவரை குரங்குளின் தொந்தரவு கொஞ்சம் குறைந்திருந்தது.

    தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. குரங்குகளுக்கு மலை பகுதியில் போதுமான உணவு இல்லாத காரணத்தால் மெதுவாக மலை அடிவாரப் பகுதிக்கு வந்து இரை தேடுகின்றன. தற்போது சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளிகளாக இந்த குரங்குகள் வந்து இருப்பவற்றை தூக்கிப் போவது வாடிக்கையாகி விட்டது.

    வீடுகளில் ஜன்னல் திறந்து இருந்தால் போதும் அந்த வீட்டில் எந்த பொருளும் மிஞ்சாது. குறைந்தது 10 முதல் 15 குரங்குகள் வரிசையாக இறங்கிவிடும். வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும் வெயிலில் காய வைத்தால் குரங்குகளுக்குதான் ஆகும் என்ற நிலை உள்ளது. சென்னிமலை டவுன் பகுதி மக்கள் குரங்கு கூட்டத்திற்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை வீதியில் பழம், பன் போன்றவற்றை எந்த பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வந்து தூக்கி செல்கின்றன என கடை வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இந்த குரங்கு கூட்டத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×