என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chief Minister Cup Sports"
- முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.
- தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதில், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
துணை முதலமைச்சரான பின், நான் இட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கானது.
முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.
இந்தியா விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விளையாட்டினை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிடும் வகையில், கழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும், 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024'-ன் மாநில அளவிலானப் போட்டிகளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம்.இந்த ஆண்டிற்கான #CMTrophy-ஐ அறிமுகப்படுத்தி,… pic.twitter.com/GP8YD0l4FI
— Udhay (@Udhaystalin) October 4, 2024
- போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
- தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநிலம் முழுவதில் இருந்தும் 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி சென்றனர்.
மாவட்ட வாரியாக வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.
- தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
- பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
தற்போது பொதுப்பிரிவு (15 முதல் 35 வயது வரை), பள்ளி (12முதல் 19 வயது வரை), கல்லூரி (17 முதல் 25 வயது வரை) கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு 04633- 212580 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்