என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister M.K.Stalin addressed"

    • குன்னூர் கீழ் அட்டடியில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
    • இல்லம் தேடி கல்வியை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, தன்னார்வலரிடம் உரையாற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    ஊட்டி,

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் வந்தார். குன்னூர் கீழ் அட்டடியில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

    அப்போது அவர் திடீரென செல்போன் வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, அங்குள்ள தன்னார்வலர் பேசுவதற்கு செல்போனை கொடுத்தார்.

    அப்போது முதல்-அமைச்சர் செல்போனில் இல்லம் தேடி கல்வியை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, தன்னார்வலரிடம் உரையாற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார். திடீரென அமைச்சர் முதல்-அமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்த சம்பவம் தன்னார்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×