search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister's Cup"

    • 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
    • 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பம், இறகுபந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, நீச்சல் என 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் மொத்தம் ஆண்கள் 10 ஆயிரத்து 359 பேரும், பெண்கள் 4 ஆயிரத்து 596 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 955 பேர் பங்கேற்றனர். முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ரூ.34 லட்சத்து ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 1,675 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவை மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராகோபால், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன.
    • பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவிலில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது.
    • இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ஒன்றிய செய லாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன், உடற்கல்வி இயக்குனர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது,

    இந்தியாவில் விளை யாட்டில் தமிழகம் முதலிடம் பிடிக்க தமிழக முதல்-அமைச்சர் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்காக தற்போது திறமை வாய்ந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார்.

    மேலும் முதல்-அைமச்சர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் தமிழக முழுவதும் 14 விளையாட்டுகள் அடங்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமும், மேலும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற ஊக்கத் தொகையும் வழங்க உள்ளார்.

    அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தியும், விளையாட்டில் கவனம் செலுத்தியும் பல தகுதிகளை பெற்று அரசு பணிக்கு சேர அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

    மேலும் இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை ஒளியேற்ற கூடியவர்கள் என்பதால் அனைவரும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, மகேஸ்வரி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார்,

    செய்யதுஅலி, மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செயலாளர் மகாராஜன், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ், மாணவர் அணி கார்த்தி, உதயகுமார், அப்பாஸ்அலி மற்றும் கேபிள் கணேசன், வேல்முருகன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தாமைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,010பேர் பதிவு செய்துள்ளனர்.
    • போட்டியில் பங்கேற்க ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை க்கான மாவட்ட விளையாட்டுப்போட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று வந்த நிலையில் நடப்பாண்டு அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் போ ட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்க ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:- பொதுப் பிரிவுக்கு கபடி, சிலம்பம், தடகளம், பேட்மிண்டன், வாலிபால் போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடை ப்பந்து, பேட்மிண்டன், கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ்,வாலிபால், நீச்சல் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபடி, தடகளம், பேட்மிண்டன், சதுரங்கம், வாலிபால் போட்டிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீ, 100மீ, ஓட்டம், கபடி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம்உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,010பேர் பதிவு செய்துள்ளனர். தனிநபர், குழுவுக்கு பதிவு செய்ய வரும் 23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
    • விளையாட்டு போட்டிகளில் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளை யாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்களின் தனி நபர் விவரங்கள், அணி விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் திறமையாக செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

    இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமைப் பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுவர்.

    ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு பரிசுத் தொகையுடன் முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்

    அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் 3 இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்புக்கான முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

    மேலும் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். எக்காரணம் கொண்டும் வேறு வழிமுறை மூலமாக போட்டிகளில் பங்கேற்க இயலாது.

    இதுகுறித்த மேலும் விபரங்கள் அறிய 7401703454 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×