search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child marriages"

    • குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.

    ஐதராபாத்:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

    • திண்டுக்கல்லில் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

    பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம் 2013ன்படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    அனைத்து ஒன்றியங்க ளிலும் 10 பேருக்கு அதிகமாக பணி செய்யும் இடங்களில் குழுக்களை அமைக்கவும், 10 பேருக்கு குறைவாக பணி செய்யும் இடங்களில் குழு பற்றிய விழிப்புணர்வு அளிக்கவும் பாலியல் ரீதியான புகார்களை பெற்று அதிகாரிகள் மூலம் மாவட்ட உள் குழுவுக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் இந்த விழிப்புணர்வை தீவிர படுத்தி பெண்களுக்கு எதி ரான பாலியல் தொந்தரவு களை தடுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×