என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "children kills"
அம்மாப்பேட்டை:
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள உடையார் கோவில் கிராமம் காடவராயர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. இவருடைய குழந்தைகள் தாரிகா (வயது 4), சித்தார்த் (2).
இந்த நிலையில் நேற்று தாரிகாவும், சித்தார்த்தும் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் திடீரென குளத்தில் இறங்கினர். இதையாரும் கவனிக்கவில்லை. இதனால் குளத்தில் இறங்கிய தாரிகாவும், சித்தார்த்தும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் விளையாட சென்ற மகனும், மகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் குளத்துக்கு சென்று பார்த்தனர். கரையில் இருவரையும் காணாததால் சந்தேகத்தின் பேரில் குளத்திற்குள் இறங்கி தேடிப்பார்த்தனர்.
அப்போது குளத்திற்குள் மூழ்கி உயிரிழந்த தாரிகா மற்றும் சித்தார்த் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரின் மனைவி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808061913410909_1_ssuicide._L_styvpf.jpg)
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.