என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » china open badminton
நீங்கள் தேடியது "China Open badminton"
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதினார்.
இதில் பன்சோத் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோ-வை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 17-21, 21-17, 15-21 எனத் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
முதல் செட்டில் 8-3 என முன்னிலையில் இருந்து பிவி சிந்து பின்னர் 17-21 என முதல் செட்டை இழந்தார். 2-வது செட்டை சிறப்பாக விளையாடி 21-17 எனக் கைப்பற்றிய போதிலும், வெற்றிக்கான 3-வது செட்டில் 15-21 என வீழ்ந்தார்.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #PVSindhu #SrikanthKidambi
சீனா ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து தாய்லாந்தின் புஸனன் ஒங்பாம்ரங்பனை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்து காலிறுதியில் ஹெ பிங்ஜியாவோ-வை எதிர்கொள்கிறார். பிவி சிந்து அவரை எதிர்த்து விளையாடிய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் கிதாம்பி டாமி சுகியார்ட்டோவை எதிர்கொண்டார். முதல் செட்டை 10-21 என ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-9 எனவும், 3-வது செட்டை 21-9 எனவும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் சீன தைபே-யின் சோயு தியென் சென்-ஐ எதிர்த்து விளையாடுகிறார்.

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து காலிறுதியில் தோல்வியடைந்தார். #PVSindhu
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் சென் யுஃபெய்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டில் சீன வீராங்கனை சென் யுஃபெய் சிறப்பாக விளையாட 11-5 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிசி சிந்துவால் முன்னேற இயலவில்லை. 7-14, 7-16, 10-16 என வந்து பின்னர் 11-21 என முதல் செட்டை இழந்தார்.
முதல் செட்டை இழந்த பிவி சிந்து 2-வது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் இடைவெளி 7-6 எனக் குறைந்தது. முதல் பாதியில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றார். அதன்பின் 17-11 என முன்னிலைப் பெற்று 21-11 என 2-வது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து 4-3 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் சென் 9-7 என முன்னிலைப் பெற்றார். முதல் பாதியில் 8-11 என பிவி சிந்து பின்தங்கினார். 16-12 என முன்னிலைப் பெற்று பின்னர் 21-15 என 3-வது செட்டை கைப்பற்றி பிவி சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் சீன வீராங்கனை சென் யுஃபெய்.

சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #ChinaOpen2018
சீனா ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்தின் சுபன்யு அவிகிங்சனனை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12 எனவும், 2-வது செட்டை சுபன்யு 21-15 எனவும் கைப்பற்றினார்.
வெற்றிக்கான 3-வது செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 24-22 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் முன்னணி வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X