என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "clean up"
- ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:
கோடை விடுமுறை முடிந்து நாளை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டும் துவங்கப்பட உள்ளதால், பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி வகுப்பறை, வளாகம், மைதானம் சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது.3 வாரங்களாக பள்ளி செயல்படாததால், மின் வயர்கள், குடிநீர், மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நிலை, தண்ணீர் இருப்பு, கழிப்பிடங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அவை சுத்தப்படுத்தப்பட்டன.
பள்ளி திறக்கும் நாளிலே புத்தகங்கள் வழங்கவும், அட்மிஷன் துவங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பள்ளிக்கு தலா இரு ஆசிரியர்களுக்கு பணி, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் அதிக மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் மாநகராட்சி சுகாதார ஊழியர் மூலமும், புறநகரில் மண்டல அலுவலகங்களில் இருந்து ஊழியர்களை அனுப்பியும் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி கல்வித்துறை, பெற்றோர், ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் மூலம் தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் செய்து தருகின்றனர். ஓரிரு மாதங்களில் மீண்டும் பழைய நிலை வந்து விடுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் பள்ளிக்கென தனியே ஒரு சுகாதாரக் குழு அமைத்து,தூய்மை பணி, பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் பள்ளி திறப்பு நாளில் இருப்பது போன்று பிற நாட்களிலும் பள்ளிகள் பளிச்சிடும். தூய்மை, பராமரிப்பு பணி செயல்பாடுகள் வரும் காலங்களில் தொடர வேண்டும்என்றனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் கமிஷனின் மூத்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப்பேசினார்கள்.
அவர்களிடம், “தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என கேட்கப்பட்டது.
அப்போது அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான எதையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் உறுதி தந்தனர்.
இது கர்நாடக சட்டசபை தேர்தலின்போது சோதித்துப் பார்க்கப்பட்டது. அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 4 மாநில சட்டசபை தேர்தலில் சோதித்துப் பார்க்கப்படும்.
சமூக வலைத்தளங்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் தளங்களில் அரசியல்கட்சிகள் வெளியிடுகிற விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அவற்றின் கட்டண விவரத்துடன் தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிட உதவும்.
இவ்வாறு அவர் கூறினார். #SocialMedia #ElectionCommission #PollCampaign
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்