search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coal mine blast"

    • நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 70-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது:-

    நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2017ம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் பலியாகினர்.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    அங்காரா:

    துருக்கியின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், சுரங்க வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்கத்தினுள் சிக்கிய 20 பேரை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    மீத்தேன் வாயு உருவானதே வெடி விபத்துக்கு காரணம் என சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #CoalMineBlast
    கியில்:

    கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

    தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #CoalMineBlast
    தென்ஆப்பிரிக்காவில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoalMineBlast
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் முமாலங்கா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.

    இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவதற்கு 20 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் நுழைந்தது.

    அப்போது திடீரென கியாஸ் வெடித்தது. இதில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் 5 பேர் சடலங்களை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.#CoalMineBlast
    ×