என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
துருக்கியில் சோகம் - சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலி
- சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் பலியாகினர்.
- மேலும் இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அங்காரா:
துருக்கியின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சுரங்க வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கத்தினுள் சிக்கிய 20 பேரை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
மீத்தேன் வாயு உருவானதே வெடி விபத்துக்கு காரணம் என சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.