search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut auction for"

    • தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 5 ஆயிரத்து 83 எண்ணிக்கையிலான 2 ஆயிரத்து 192 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.24.13 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.30.50 காசுகள், சராசரி விலையாக ரூ.29.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.61 ஆயிரத்து 212-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 28 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,813 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50 ஆயிரத்து 841-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.

    அறச்சலூர்:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 96 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 354 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.76-க்கும், சராசரி விலையாக ரூ.24.89 என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 821-க்கு விற்பனையானது.

    • மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 14 ஆயிரத்து 280 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 662 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.23.20 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.19 காசுகள், சராசரி விலையாக ரூ.25.80 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 568-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 99 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 101 கிலோ எடையுள்ள தேங்கா ய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.29 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.89 காசுகள், சராசரி விலையாக ரூ.77.85 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.58.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.49 காசுகள், சராசரி விலையாக ரூ.68.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 707-க்கு விற்பனைது.

    மொத்தம் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 179-க்கு விற்பனையானது.

    • தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 13 ஆயிரத்து 229 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 935 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.51 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.26.66 காசுகள், சராசரி விலையாக ரூ.25.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.

    • விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 36 ஆயிரத்து 475 எண்ணிக்கையிலான 14 ஆயிரத்து 860 கிலோ எடை யுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ 21.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.15 காசுகள், சராசரி விலையாக ரூ22.75 காசுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.


    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    அவல்பூந்துறை:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 15 ஆயிரத்து 182 எண்ணிக்கையிலான 6 ஆயிரத்து 738 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.69 காசுகள், சராசரி விலையாக ரூ.24.50 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 513-க்கு விற்பனையானது.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 20 ஆயிரத்து 789 எண்ணிக்கையிலான 9 ஆயிரத்து 235 கிலோ எடை கொண்ட தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.21.69 காசுகள்,

    அதிகபட்ச விலையாக ரூ.24.89 காசுகள், சராசரி விலையாக ரூ.23.79 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 567-க்கு விற்பனையானது.

    • ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் க்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 444 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 9,622 ரூபாய்க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,664 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 20 ரூபாய் 23 காசுக்கும், அதிக பட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 22 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3,016 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.

    • விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.77-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

    இதேபோல் மொடக்குறிச்சி, வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 89 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது.

    • விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,898 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    ×