search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut farmers protest"

    • தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தேங்காய் விலை வீழ்ச்சி குறித்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள நிலையில், ஆட்களை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது.தென்னை விவசாயத்தை காப்பதாக கூறி மத்திய அரசு கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையாக, ரூ 105.90 நிர்ணயித்தது. ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு வழியின்றி, தனியாரிடம் விற்க செல்லும் போது, ரூ. 82 நிலவரத்தில் மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்கின்றனர். கொப்பரைக்கான ஆதார விலையை,150 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.

    ×