search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut pulse auction for"

    • தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில்

    முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.79.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.09 காசுகள், சராசரி விலையாக ரூ.80.76 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.29 காசுகள், சராசரி விலையாக ரூ.71.05 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.

    • தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 991 மூட்டைகள் கொண்ட 47 ஆயிரத்து 206 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல்தர தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.09 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.79.49 காசுகள், சராசரி விலையாக ரூ.78.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.61.85 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.45 காசுகள், சராசரி விலையாக ரூ.70.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 88 ரூபாய் 88 காசுக்கும், சராசரி விலையாக 87 ரூபாய் 90 காசுக்கும்,

    இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 45 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 42 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 89 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 7,401 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,660 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 81 ரூபாய் 47 காசுக்கும்,

    2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 85 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 9 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 39 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    ×