என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Community baby shower for"
- 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- அமைச்சர் முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகி த்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாராவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டணர்.
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், காமராஜர் நகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலையில் வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவினை தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.
மேலும் 62 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில், சென்னிமலை பேரூராட்சி மற்றும் அரசு மருத்து மனைக்கு இடம் வழங்கிய முத்துசாமி முதலியார் உருவப்படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அவர்களின் வாரிசு தாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் முதல்- அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் ரூ.46.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னிமலை சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடத்தில் கட்டப்பட்ட காட்சி அறையுடன் கூடிய சில்லறை விற்பனை நிலையம் மற்றும் சரக்கு இருப்பு கிடங்கினை திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. பிரபு, நகர செயலாளர் ராமசாமி, பொதுகுழு உறுப்பினர் சா. மெய்யப்பன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை யூனியன் தலைவர் காயத்திரி, துணை தலைவர் பன்னீர் செல்வம், இளைஞர் அணி சதீஷ் என்கிற சுப்பிர–மணியம், அசோக், கைத்தறி துறை உதவி இயக்கு–நர் சரவணன், மேலாண்மை இயக்குநர் தமிழ்செல்வன், சென்னிமலை பேரூராட்சி செயல் அலு–வலர் ஆயிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்