search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conditional bail"

    • சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.
    • மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    பெங்களூரு:

    எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வின் மூத்த மகன் சூரஜ் ரேவண்ணா (வயது 37). டாக்டரான இவர் தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். இந்த நிலையில் சூரஜ் ரேவண்ணா, தனது கட்சி தொண்டர் உள்பட 2 பேரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் ஒலேநரசிப்புரா போலீசார் கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி சூரஜ் ரேவண்ணாவை கைது செய்தனர்.

    இந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் சூரஜ் ரேவண்ணாவை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான முதல் பாலியல் வழக்கில் ஜாமின் கேட்டு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சூரஜ் ரேவண்ணா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு கோர்ட்டு தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது ஜாமின் பெற்று வெளியே வந்த பிறகு புகார் அளித்த நபரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்ட கூடாது. மாதத்தின் ஒவ்வொரு 2-வது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராக வேண்டும்.

    அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆஜராகி இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கு டெபாசிட் தொகையை உத்தரவாதமாக செலுத்துவது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதல் வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சூரஜ் ரேவண்ணா 2-வது பாலியல் வழக்கில் கைதாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
    • மனுதாரர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

    சென்னை:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.

    ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் அதே கோர்ட்டில் ஜாமீன் கோரி மணியன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மணியன் சார்பில் ஆஜரான வக்கீல் பால்கனகராஜ், மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், மனுதாரர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'ஏற்கனவே ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தற்போது சூழ்நிலை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, மணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மணியன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

    பாஜக இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பா.ஜ.க. இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.



    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பிரியங்கா ஷர்மாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ஜ.க. பிரமுகரை விடுவிப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியது, அத்துடன் தனது கண்டனத்தையும் தெரிவித்தது. 
    போட்டோ ஷாப் முறையில் மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கைதான பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 



    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.

    இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்ததுடன், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
    சபரிமலை பற்றி அவதூறு பரப்பியதால் கைதான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima
    திருவனந்தபுரம்:

    பி.எஸ்.என்.எல். ஊழியரும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா சபரிமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா போலீசார் அவரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.

    கைதான ரெஹானா பாத்திமாவின் ஜாமீன் மனுவை பத்தினம் திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இன்று ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கியது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima

    ×