என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "conductor killed"
- ஹெல்மெட்டையும் தாண்டி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- பணிக்கு வந்தபோது பரிதாபம்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள வல்லண்டராம் வசந்தம் நகரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 33) கொணவட்டம் போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பைக்கில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மேல்மொணவூர் வங்கி அருகே வந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பரந்தாமன் அணிந்திருந்த ஹெல்மெட்டையும் தாண்டி அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரந்தாமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயிலம் அருகே விபத்து லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியானார்.
- முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
சென்னை கோயம்பே ட்டில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றி க்கொண்டு விருதாச்சலம் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீமுஷ்ணம் கோ அருகே உள்ள சாவடி குப்பம் பகுதியை சேர்ந்த இளையராஜா(42), என்பவர் ஓட்டி சென்றார்.கண்டக்டராக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(45) உடன் வந்தார். அப்போது திண்டிவனம் அருகே மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேனிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் இடது புறமாக அமர்ந்து சென்ற நடத்துனர் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலாஹிர் அஹமது(35), உன்னலட்சுமி (42), திட்டக்குடியை சேர்ந்த அமல்ராஜ்(25), திருக்கோவிலூரை சேர்ந்த கோவிந்தராஜ்(41), வேப்பூர் பகுதியை சார்ந்த சுரேஷ்(37), உஷா (42) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கண்டக்டரின் உடல் பிரேதபரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்