search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress working committee meeting"

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டத்தை தொடங்கி உள்ளனர். சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். #CongressWorkingCommittee #CWCMeeting
    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. #CongressWorkingCommittee #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஏற்கனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விவாதத்தின்போது ராகுல்காந்தியின் உரை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே வேகத்துடன் பாராளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வழிமுறைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த கூட்டத்திற்குப் பிறகு மாநிலம் வாரியாக பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressWorkingCommittee #RahulGandhi
    ×