search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crackers shops"

    • போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது.
    • பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    மேலும் தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தியுள்ளது.

    பட்டாசுக் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான ஆபாஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

    தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர் தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.

    நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் களஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனா்.

    போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

    இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன.

    இதில் தகுதியான 7,200 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளியையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வகையில் தீயணைப்புத் துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 321 பள்ளிகள், 61 கல்லூரிகள், 598 பொது இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிகழ்ச்சிகளில் 61 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றுள்ளனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி தீபாவளி வரை நடைபெறும் என்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள், உரிய விவரங்களுடன் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

    கடை அமையும் இடத்தின் வரைபடம். பட்டா மற்றும் ஆவணம், உரிமக்கட்டணம், 600 ரூபாய் செலுத்திய சலான், சொத்து வரிக்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரர் போட்டோ, முகவரி சான்று மற்றும் தீயணைப்பு துறை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில், கூறியுள்ளார்."

    ×