search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crime branch police"

    • கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அகமதாபாத்:

    சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்(வயது56). குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் புலித்தோல் வைத்திருந்ததாக அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் (பாது காப்பு) சட்டம், 1972 இன் பிரிவுகள் 2, 39 (பி), 44, 49 (பி), 50 மற்றும் 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர் தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், இரண்டு கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஜெயினுடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே கைதான ஜெயின் மற்றும் 7 பேரையும் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். கைதான ஜெயின், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • திருஞானம் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது.
    • போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் தவறவிட்ட நகையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார். அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.  சிதம்பரம் உசூப்பூர் சபாநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் திருஞானம் (வயது 56). இவர் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருஞானம் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்படி, சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் அடையாளம் தெரியாத பெண் கீழே விழுந்த நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் பின்னலூரைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. அப்பெண் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்டு தவறவிட்ட திருஞானத்திடம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நகையை ஒப்படைத்தனர்.

    டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4.5 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #RedSandalwood #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சந்தேகப்படும் படியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் லாரியில் 4.5 டன் அளவிலான தங்கம் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் விவகாரத்தில் முதற்கட்டமாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    அதிக அளவிலான இந்த செம்மரக்கட்டைகளின் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் கும்பல் குறித்த தீவிர விசாரணை டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் நடைபெற்று வருகிறது. #RedSandalwood #Delhi
    ×