என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dakal attai seized
நீங்கள் தேடியது "dakal attai seized"
தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி:
அரிய வகை கடல் உயிரினமான கடல் அட்டைகள் மருந்து வகைக்காக பயன்படுத்தப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் இதனை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரைன் போலீசார் நேற்று இரவு திரேஸ்புரம் முத்திரையர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படகில் இருந்து சாக்கு மூட்டைகள் ஒரு ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ஆய்வு செய்த போது 160 கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வேன் டிரைவரான மகேந்திரன் (வயது 36) என்பரை கைது செய்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் இன்று மரைன் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் உலர்த்தி வைக்கப்பட்ட 250 கிலோ அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தியவர்கள் யார் ? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று, இன்று தொடர்ந்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×

X