search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dakshina Mara Nadar Sangam College"

    • பேராசிரியை மீனா சமூகவலைதளங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி எடுத்துரைத்தார்.
    • சான்றோரும் சமநிலை உணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மாணவர்கள் குறைதீர்க்கும் மன்றம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா வரவேற்றார். முதல்வர் மேஜர் து.ராஜன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மீனா சமூகவலைதளங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சகாய தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்றத்தின் உறுப்பினர்களான ராஜேஸ்வரி, மேரி பெர்னார்டு, ஷோபா, செல்வராணி, புனிதா, கோகிலவாணி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் கல்லூரியின் சான்றோர் ஆய்வு மையம் மற்றும் சம வாய்ப்பு மையம் இணைந்து சான்றோரும் சமநிலை உணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறைத் தலைவர் நிர்மலா, தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு தலைவர் கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்திய விமானப் பாதுகாப்புத்துறை மண்டல ஒருங்கிணைப்பாளர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில், சம வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
    • வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்-

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக "தொழில் முனைவோரின் எதிர் கால திட்டம்-2047" என்ற தலைப்பில் தேசிய அளவி லான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் கே.மேகலா சர்மினி வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் வி.பி.ராம நாதன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஆர்.முருகேசன் தொடக்க உரையாற்றினார். முதல் அமர்வில் சிறப்பு விருந்தி னராக வணிகவியல் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தர்ம ரஜினி சிறப்புரை யாற்றினார். 2-ம் அமர்வில் கேரளா, கொச்சின் பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் அருணாசலம் இந்தியாவில் தொழில் முனைவோரின் எதிர்கால திட்டம் தொடர்பான கருத்து க்களை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவி களுடன் கலந்து ரையாடல் நடை பெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேரா சிரியர்கள் செய்திருந்தா ர்கள். கருத்தரங்கில் தேசிய தர மதிப்பீட்டு குழு தலைவர் புஷ்பராஜ், அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஒருங் கிணைப் பாளர் வேல் பாண்டி நன்றி கூறினார். 

    • கல்லூரி முதல்வர் ராஜன் புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
    • சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில், எம்பிராயடரிங் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சி பட்டறை நடைபெற்றது. பேராசிரியர் மரிய கிறிஸ்டின் நிர்மலா வரவேற்று பேசினார். முதல்வர் ராஜன், தலைமை தாங்கி புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ் பயிற்சியின் அவசியம் பற்றி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் மனோகர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து மாணவர் திறன் மேம்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளையும், பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தென்காசி, சஞ்சய் அகாடமி நிறுவனர் செண்பகவல்லி பயிற்சியின் நோக்கம் பற்றி பேசி குழு மூலமாக மாணவர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர் திறன் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுஜா பிரேமரஜினி, லதா, மனோகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 47-வது பட்டமளிப்பு விழா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் திடலில் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 28 மாணவர்கள் உள்பட 600-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், "இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியாவின் தூண்கள். நீங்கள் நல்லொழுக்கத்துடனும், நேர்மை தவறாமலும் வாழ்வில் பயணித்து நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்" என்றார். விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியர் வேல் பாண்டி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் (அணி எண்:-37), ஐ.கியூ.ஏ.சி. மற்றும் வள்ளியூர் பல்நோக்கு சமூகசேவை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி பேசினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார்.

    வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் டாக்டர் விதுபாலா புற்றுநோய் குறித்து விளக்கி கூறினார். மாணவர் சுதர்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் செய்து இருந்தனர்.

    • வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கழியலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டியம் போன்ற பல்–வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.ராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    விழாவில் கல்லூரி குழு மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார், எம்.ஜோசப் பெல்சி, பண்ணை கே.செல்வகுமார், பி.ரகுநாதன், டி.சாரா சவுந்தரராஜன், பி.செல்வராஜ் நாடார், கோபால் நாடார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த்துறை, கவின்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரகாஷ், கிராமிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழாபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது
    • பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ராமநாதன் நாடார், தலைவர் காளிதாஸ் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்–வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு அரசு உதவிபெறும் மாணவ-மாணவிகளுக்கும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) சாக்ரடீஸ் சுயநிதி பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் ஐ.கி.யூ.ஏ.சி. இணைந்து செய்து இருந்தது.

    ×