என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dakshinamara Nadar Sangam"
- அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- 200 மீட்டர் ஓட்டத்தில் 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஏ.ராஜராஜன் நாடார் மகள் ஆர்.அபிநயா என்ற மாணவி கோவையில் நடைபெற்ற 38-வது தேசிய இளையோருக்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 1,000 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 2012-ம் ஆண்டு 24.28 வினாடிகளில் கடந்த சாதனையை தற்போது 24.16 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவி ஆர். அபிநயா நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். மாணவியை, சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.வைத்திலிங்கம் நாடார், எஸ்.காமராஜ் நாடார், எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் நாடார், பி.ரகுநாதன் நாடார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.
- காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், பி.ரகுநாதன் நாடார், எஸ்.இசக்கிமுத்து என்ற அசோகன் நாடார், எஸ். நித்திய பாலையா நாடார் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.
- கூட்டத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
- நிகழ்ச்சிகளை காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார்.
வள்ளியூர்:
நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் 57-வது மகாசபை கூட்டம், தெற்கு கள்ளிகுளத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் வரவேற்று பேசினார். செயலாளர் டி.ராஜகுமார் நாடார் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஏ.சிவபாலன் நாடார் பேசுகையில், ''நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவள விழா கொண்டாட வேண்டும்'' என்றார். சமுதாய வளர்ச்சி பணிகள் குறித்து சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் பேசினர். நிகழ்ச்சிகளை காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் சங்க காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள், சென்னை கிளை தலைவர் வி.செல்வராஜ் நாடார், செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம்.ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுட்கால உறுப்பினர்கள், சமுதாய பெரியோர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சங்க இயக்குனர் பி.எஸ்.கனிராஜ் நாடார் நன்றி கூறினார்.
- பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.
- சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்ற ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் அம்மா நகரைச் சேர்ந்தவர்கள் இளையபெருமாள் மகன்கள் இசக்கிமுத்து (வயது 35), மாரியப்பன் (33) செல்லப்பா (31). இவர்கள் 3 பேரையும் குற்ற வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்ற அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் வாயிலும் கற்களை வைத்து அடித்தும், அவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள், சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். சங்க இயக்குனர்கள் எஸ்.கே.டி.காமராஜ், வைத்திலிங்கம், கருணாகரன், இந்து நாடார் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் காசிராஜ், சிவந்திபுரம் பொது வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்