search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deadline for Governor"

    • பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.

    சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?

    இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.

    ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.

    ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.

    இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    ×