search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defamatory speech"

    • தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கில் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கேட்டு சி.த.செல்லபாண்டியன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட முதலமைச்சர் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கேட்டு சி.த.செல்லபாண்டியன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதலமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, சி.த.செல்லபாண்டியனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் லியோனி, முதல்வர் பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #dindigulLeone #edappadipalanisamy

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக பேசினார். மேலும் தமிழக அரசு பற்றியும் விமர்சனம் செய்தார்.


    இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலை பாண்டிபஜார் சட்டம்-ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். #dindigulLeone #edappadipalanisamy

    ×