search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defrauded of payment"

    • மதுரை பெத்தானியாபுரம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை பெத்தானியா புரம் சின்னசாமி பிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ''வி.எல்.சி. அக்ரோ டெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.

    பொதுமக்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்கள் நம்பிக்கை மோசடி செய்தனர்.

    இதுபோல் அவரது ஊரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையில் இருந்து வருகிறது.

    மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிலையம் எதிர்புறம், மதுரை-14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×