search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees have darshan of"

    • ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
    • மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும், பள்ளி விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக விளங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.

    இன்று செவ்வாய்க்கி ழமை மற்றும் முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள்.

    அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.

    சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர். மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் எடுத்த இடத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.

    ×