search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees worship at"

    • தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானி:

    தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், கரூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் நீண்ட சரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம், சுற்றுலா தலம் என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் இன்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் உட்பட பல்வேறு மூலவர்க ளுக்கு பல்வேறு திரவிய ங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு பக்தர்க ளுக்கு அருள் பாலித்தனர்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு காலை முதலே பக்தர்கள் பலர் வந்து ஆற்றில் புனித நீராடி னர். மேலும் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.

    அதே போல் சென்னிமலை முருகன் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் காலை நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தினர்.

    இதே போல் கொடுமுடிக்கு இன்று காலை கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி கரையில் புனித நீராடினர். இதையடுத்து மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    மேலும் அந்தியூர் பத்ர காளியம்மன், கோபிசெட்டி-பாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சை மலை, பவள மலை முருகன், பவானி செல்லியாண்டி யம்மன், கருமாரியம்மன், அம்மாபேட்டை காவிரி கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்க நாதர் கோவில் உள்பட மாவட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்துபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், கொங்காலம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் கருங்கல் பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    இதே போல் ஈரோடு அடுத்த திணடல் வேலாயுதசாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி- தெய்வானையுடன் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திண்டல் மலைக்கு வந்து வழிபட்டனர்.

    மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பழ வகைளை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மதுளை உள்பட பழ வகைகள் மற்றும் பணம், நகைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்துக்குட்பட்ட காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. 6 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக பக்தர்களால் கருதப்படுகிறது.

    இக்கோவிலில் முருகன், அகஸ்தியர், காலபைரவர், துர்க்கை அம்மன், பிரம்மன், லட்சுமி, விநாயகர் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் உள்ளன. ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள், குழந்தை பேரின்மை, பிரம்மஹத்தி தோஷங்கள், பித்ரு சாபங்கள் இவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் கடந்த 2 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற்றன. சித்திரை முதல் நாளான இன்று ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

    மேலும் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகள் விலகி செல்லும் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அனுமன் ஜெயந்தியையொட்டி வ.உ.சி.பூங்காவில் உள்ள மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
    • இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    அனுமன் ஜெயந்தியையொட்டி, ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஸ்ரீ மகா வீர ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அனுமனுக்கு கணபதி பூஜை மற்றும் அபிஷேகம் நடை பெற்றது. அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனக் காப்பு சாத்தப்பட்டது.

    அதிகாலை 5 மணி முதல் ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் 1.30 மணிக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

    பக்தர்களுக்கு ஆஞ்ச நேயர் வார வழிபாட்டு குழு சார்பில் பிரசாதமாக லட்டும், நாள் முழுவதும் அன்ன தானமும் வழங்க ப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கீதா, தக்கார் அருள்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டனர்.

    இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வழிபடுவதற்கு தனி வரிசையும், வழிபட்டு வெளியே செல்வதற்கு தனி வரிசையும் போட ப்பட்டிருந்தது. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல கள்ளுக்கடை மேடு ஆஞ்ச நேயர் கோவி லிலும் அனுமன் ஜெயந்தியை யொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். அனுமன் ஜெயந்தியை யொட்டி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்ச நேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் கோட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சத்தி ரோட்டில் உள்ள கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள கோவி ல்களில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோபி செட்டிபாளையம் அமர்ந்த ராயர் கோவில் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவி லில் இன்று காலை பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பாரியூர் ஆதி நாராயண பெருமாள், மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு துளசி மாலை அலங் காரம் செய்யப்பட்டது.

    இதில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழி பட்டு சென்றனர். இதை யடுத்து பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் டி.என்.பாளை யம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி சஞ்சீவராயன் பெருமாள் கோவிலுள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து முழு சந்தனக்காப்பு பூசப்பட்டு, பால், தயிர், இளநீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 108 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட மாலைகளும் அணிவிக்கபட்டது.

    இதையொட்டி ஆஞ்ச நேயரை தரிசிக்க அத்தாணி, பெருமுகை, கொண்டை யம்பாளையம், கள்ளி ப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், கோபி உள்ளிட்ட டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்ச நேயருக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வட மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    சத்தியமங்கலம் பெரிய கோவிலில் உள்ள ஆஞ்ச நேயர், அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்து உள்ள ஜெய ஆஞ்ச நேயர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். அவர்களுக்கு பிரசாத மாக பொங்கல் மற்றும் சாதம் வழங்கப்பட்டது.

    மேலும் கவுந்தப்பாடி சந்தைபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவி லில் உள்ள ஆஞ்சநேயர் புளியம்பட்டி பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அல ங்காரம் செய்யப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை பால், தயிர், சந்தனம், விபூதி, உட்பட பல ேஹாம திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் செய்த னர்.

    அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது, இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்த ர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்க ப்பட்டது.

    விழா எற்பாடுகளை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் சிவக்குமார், பழனிவேலு ஆகியோர் தலைமையில் செய்திருந்தனர்.

    அதேபோல் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, பவானி, சித்தோடு, ஆப்பக் கூடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் ேகாவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×