search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deworming Tablets"

    • குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
    • அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூா் மாவட்டத்தில் 7.8 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

    அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரையில் உள்ள 7.8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் 'அல்பெண்டசோல்' மாத்திரை நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படும்.

    அதேபோ 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் (கா்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மாா்களைத் தவிர) 2.04 லட்சம் பேருக்கும் மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    குடற்புழுதொற்றில் இருந்து விடுபட இந்த மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கணபதிபாளையம் துணை சுகாதார கிராம செவிலியர் கார்த்திகா கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் தவணையாக குழந்தைகள்.பெண்கள் 9.84 லட்சம் பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது.

    1-19 வயதுடைய குழந்தைகளுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) 7.80 லட்சம் மற்றும் 20வயது முதல் 30வயது வரை 2.04 லட்சம் கர்ப்பிணி.பாலூட்டும் தாய்மார்கள் உட்பட பெண்களுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்படுகிறது . குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு,சோர்வு,பசியின்மை,ரத்த சோகை, குமட்டல் வாந்தி ஏற்படும்.குடற்புழு தொற்று தடுக்கும் வகையில் பெண்டசோல் என்கிற குடற்புழு மாத்திரை வழங்கப்படும்.

    மாத்திரையை காலை அல்லது மதியம் உணவு உட்கொண்ட பின் அரைமணி நேரம் கழித்து உட்கொள்ள வேண்டும்.எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் பெறலாம். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவிலியர்கள் நேரில் சென்று வழங்குவார்கள்.

    நாளை காய்ச்சல்,சளி,வயிற்றுபோக்கு போன்றவைகள் இருந்தால் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்படாது. அதற்கு பதிலாக 21-2-23 (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படும் என்றார்.

    • தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அல்பெண்ட சோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
    • குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அல்பெண்ட சோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், அங் கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்ப டுகிறது.

    மேலும் பள்ளிக்கு செல்லாத சிறார்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மக ளிருக்கும். அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 49 ஆயிரத்து 813 சிறார்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 844 மகளிருக்கும் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முகாமில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.

    இதில் விடு பட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை )அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

    குடற்புழு மாத்திரை உட்கொள்வ தினால் குழந்தை களுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்ப தற்கு உதவுகிறது.

    எனவே முகாம்களில் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாண விகள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மகளிரை அழைத்து வந்து குடற்புழு நீக்க மாத்தி ரைகளை பொது மக்கள் அனைவரும் பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள்நல்வாழ்வு த்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேருக்கு மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியாவில் தமிழகத்தில் 25 சதவீதம் பேர்இப்பரவல் காணப்படுகிறது. இந்நோய்ப்பரவலை கட்டுப்படுத்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும்குழந்தைகள் நலமையங்களின் வாயிலாக மொத்தம் 1,382 நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்றைய தினம்வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள 4,58,855 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 97,329 பெண்களுக்கும் என மொத்தம் 5,56,184 நபர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவுசாப்பிட்ட பிறகு மாத்திரையை நன்கு கடித்து, மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் (200 மி.கி) அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி), 20-30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி) வழங்கப்பட வேண்டும். மேலும், விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற 16 - ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

    இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுசு காதாரத்து றையுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், பெற்றோர்ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் குடற்புழு மாத்திரையின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேணடும் என கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்கநர் (சுகாதாரப் பணிகள்) ராஜா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்கலந்து கொண்டனர்.

    • குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் 2-ம் சுற்று நேற்று கடைபிடிக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு 16-ந் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) ''அல்பெண்டசோல்'' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 65 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கும், 20-30 வயது உள்ள 67 ஆயிரத்து 637 பெண்களுக்கும் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள் தோறும் சென்று இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் 281 கிராம சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர்கள், 1,277 அங்கன்வாடி பணியாளர்கள், 1,510 பள்ளி மற்றும் கல்லூரி நோடல் ஆசிரியர்கள் மூலமாக அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

    இந்த முகாமில் 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை யொட்டி, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கு, 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மேடுபக்கிரிசாமி உயிர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரராசு, பொதுசுகாதார செவிலிய அதிகாரி மகேஸ்வரி, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×