search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digging work"

    • திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது,
    • பள்ளம் தோண்டும் பணியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், திண்டிவனம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிராஜ் மிர்ஜித் என்ற வடமாநில தொழிலாளர் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தெரிவிக்கை யில், கடந்த 11-ந்தேதி திண்டிவனம் நகராட்சியில் வார்டு எண் 19, ரொட்டிக்கார தெருவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு மண் தோண்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிராஜ் மிர்ஜித் உட்பட 4 நபர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலை சுமார் 4 மணி அளவில் குழாய்கள் பதிக்கப்பட்டு மண் மூடுவதற்கு ஏதுவாக தடுப்பு பலகை அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சிராஜ் மிர்ஜித் என்பவர் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த அடிப்பட்ட சிராஜ் மிர்ஜித்தை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில்சிராஜ் மிர்ஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன சிராஜ் மிர்ஜித்க்கு தொழிலாளர் குழு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ரூ.15 லட்சம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்துவிட்ட சிராஜ் மிர்ஜித் உடல் பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுஜாதா, விழுப்புரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.அன்பழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு
    • கற்களை சேதப்படுத்தாமல் தோண்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா எலத்தூர் கிராமத்தில் கரை கண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாசி மகத்தன்று தீர்த்தவாரி திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சில காரணத்தால் தீர்த்தவாரி நடத்துவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கரைகண்டீஸ்வரரை ஆற்றுக்கு எடுத்து சென்று தீர்த்தவாரி நடத்துவதற்காக மந்தவெளி பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் பள்ளம் தோண்டினர்.

    அப்போது பள்ளம் தோண்ட முடியாத அளவுக்கு பெரிய, பெரிய கற்தூண்கள் காணப்பட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் போளூர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கலசபாக்கம் சரவணன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த கற்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருந்தால் ஆங்காங்கே சிதறி கிடந்திருக்கும். கோவில் கோபுரத்தின் மேல் மூடப்பட்டிருக்கும் தூண்களாகவே உள்ளது.

    மேலும் அந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் உள்ளது. எனவே கண்டிப்பாக இங்கு கோவில் இருந்து, நாளடைவில் புதைந்தி ருக்கலாம் என கருதப்பட்டது.

    எனவே 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு முதலில் மணலை அப்புறப்படுத்தி உள்ளே இருக்கும் கற்களை சேதப்படுத்தாமல் அதுபற்றி தெரிந்து கொண்ட பிறகு பொக்லைன் எந்திரம் வைத்து மற்ற பணிகளை தொடங்கலாம் என்று அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணியாளர்களை கொண்டு ஆற்றில் கோவில் புதைந்துள்ளதாக கூறப்படும் இடத்தில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    ×