search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DISCOVERY OF THE CHOLA INSCRIPTION"

    • 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நில அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    • கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கு அருகிலுள்ளது கண்ணனூா். இந்த ஊரானது 14-ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசா்களின் தலைநகரமாக விளங்கியது.

    சோழப் பேரரசா் மூன்றாம் ராஜராஜருக்கு உதவவுதற்காக, மைசூா் பகுதியிலிருந்து சோழநாட்டுக்கு வந்த ஹொய்சள அரசா்கள், 90 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனா்.

    இக்காலக் கட்டத்தில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என எழுச்சியுடன் இருந்தது. இக்கோயிலில் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அர. அகிலா ஆகியோா் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அளவுகோல்களையும், 14-18-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்தனா்.

    இவற்றை மேலும் ஆய்வு செய்ததில், இக்கோயில் மூன்றாம் ராஜராஜா் காலத்தில் கட்டப்பட்டிருப்பதும், பொதுக்காலம் 1221-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் இந்த வளாகத்தில் பொறிக்கப்பட்ட அந்த மன்னிரின் 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்பதும் தெரியவந்துள்ளது. இக் கோயில் இறைவனை கழுகிறை நாயனாா் என்றழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆய்வில் கண்டறியப்பட்ட 3 அளவுகோல்களுள் 87 செ.மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கு இடையில் விமானத்தில் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது கட்டுமானத்துக்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோல் ஆகும்.

    முக்தீசுவரத்துக்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டதில், கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நல்லதம்பி மகன் காவுடை நயினான் என பொறிக்கப்பட்டிருப்பது, கோயில் திருப்பணியில் பங்கேற்றவரின் பெயராக இருக்கக் கூடும் என்று ஆரராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    ×